வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளின் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களுக்கு முன் வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
600 MW of power generation has been affected due to boiler failure at the North Chennai Thermal Power Plant.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.