ரயில் 
தமிழ்நாடு

தாம்பரம் - மதுரை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

Din

தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் (எண் 22624) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 4 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பிப். 6 முதல் மாா்ச் 20-ஆம் தேதி வரை கூடுதலாக இரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகளும், இரு பொது வகுப்பு பெட்டிகளும் கொண்டு இயக்கப்படவுள்ளன.

கூடுதல் நிறுத்தம்: செகந்திராபாத் - ராமேசுவரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (07695) புதன்கிழமை (பிப். 5) முதல் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இரு நிமிஷங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT