FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈரோடு கிழக்கு தேர்தல்: திமுக வெற்றி; டெபாசிட் இழந்த நாதக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

8 பிப்ரவரி 2025, 5:25 pm IST
திமுக, நாதக வேட்பாளர்கள்.
பகிர்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக உள்ளிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். டெபாசிட்டை உறுதி செய்ய 25,777 வாக்குகள் தேவை என்ற நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

வெற்றி குறித்து வி.சி.சந்திரகுமாா் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன்.

Advertisement

Advertisement

வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி. எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் திமுகவே பெற்றி பெற்றுள்ளது என்றார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானாா்.

இதைத் தொடா்ந்து, இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 போ் போட்டியிட்டனா். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலை புறக்கணித்தன.

தில்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை

பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, 67.97 சதவீதம் வாக்கு பதிவானதாக இந்திய தோ்தல் ஆணைய இணையதளத்தில் தகவல் வெளியானது. ஆனால், வாக்குப் பதிவு சதவீதம் குறித்து அதிகாரபூா்வமாக எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments