FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Updated On : 14 பிப்ரவரி 2025, 10:13 pm IST
நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - X | K.Annamalai
பகிர்:

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மலர் அஞ்சலி நிகழ்ச்சியில் பாஜக தேசிய இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, ``தமிழகத்தில் பேருந்து, பள்ளி, கல்லூரி என எங்கும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பு இல்லை. காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலருக்குகூட பாதுகாப்பு இல்லை.

Advertisement

Advertisement

கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது, தீவிரவாதத் தாக்குதல். ஆனால், அதனை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று தமிழக முதல்வர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் வேட்டையாடி கொண்டு வருவோம் என்பதற்கிணங்க, மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதியை இந்தியாவுக்கு அழைத்து வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி அனுமதி பெற்றுள்ளார்.

திமுக அரசு, தனது கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2024-ல் திமுகவின் வாக்கு வங்கி 7 சதவிகிதம்வரை குறைந்துள்ளது; அடுத்த தேர்தலில் 20 சதவிகிதம்வரையில் குறையும். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறந்த முதல்வர்கள் பட்டியலிலும் சரிந்துள்ளார். பாஜகவின் வாக்கு வங்கி 21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தனியார் நிறுவனக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும், தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்து ``தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும்போது, தமிழக அரசே பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். இது அரசியல் கிடையாது’’ என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments