FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பெண்ணைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை: முதல்வர் தாக்கல் செய்த சட்டதிருத்த மசோதா!

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை உள்பட கடும் தண்டனை விதிக்கும் சட்டதிருத்த மசோதா தாக்கல்

Updated On : 10 ஜனவரி 2025, 11:51 am IST
பேரவையில் மு.க ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில், பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சட்ட திருத்த மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் மரணமடையும் வரை சிறையிலேயே இருக்கும் வகையில் தண்டனையை அதிகரிக்கும், 2025 குற்றவியல் திருத்தச் சட்ட முன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை, பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது என்றார்.

Advertisement

Advertisement

மேலும், பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, தண்டனைகள் கடுமையாக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால், ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம் வகை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்க மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களையும் தண்டனையையும் கடுமையாக்கும் மசோதாவை தமிழக அரசு கொணடு வந்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட சில குற்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்படும்போது, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், அதில் தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார்.

இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments