வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகி சரண்யா.. 
தமிழ்நாடு

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.

DIN

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்ற 35 வயது பெண்ணை திங்கள்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் தலையை துண்டாக்கி கொலை செய்தது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது;

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் இறந்துவிட்டதால், சரண்யா பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(45), என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரிபுரம் மீன் மார்க்கெட் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். திங்கள் கிழமை இரவு பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாக சென்றுள்ளார்.

அதன் பின்னர் சரண்யா கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் சந்துப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டியுள்ளனர். இதில், சரண்யா தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதில் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து வாட்டாத்திகோட்டை காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

SCROLL FOR NEXT