அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
ஆரணி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் 2 மணிநேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அவரது மகன்களான விஜய்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சேவூர் ராமச்சந்திரன், அதிமுக ஆட்சியின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக (2016 - 2021) பதவி வகித்தவர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.