கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை; சத்தியம்: சீமான்
கன்னட மொழி குறித்து கமல் பேசியது தொடர்பாக சீமான் கருத்து.
கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை; சத்தியம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
அண்மையில் நடந்து முடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிவராஜ்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பேசிய கமல்ஹாசன், “ சிவராஜ்குமார் குடும்பத்தினர் என் குடும்பம்தான். தமிழே உறவே என்றுதான் என் பேச்சை துவங்கினேன். தமிழிலிருந்து வந்ததுதான் கன்னடம்” என்றார்.
Advertisement
Advertisement
இப்பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கன்னட மொழி குறித்து கமல் பேசியது உண்மை; சத்தியத்திலும் சத்தியம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் எல்லாம் தமிழ் மொழியில் இருந்து வந்தவைதான்.
தன் வரலாற்றை தெரிந்து கொள்ளாத, உண்மையை உணராதவர்கள் அவரை எதிர்க்கின்றனர். இது தெரியாமல் பதாகையைக் கிழித்தால் கிழிக்கட்டும்” என்றார்.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் தக் லைஃப் பேனர்கள் கிழிப்பு... என்ன ஆனது?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.