சீமான் குறித்து அவதூறு யூடியூபா்கள் இருவா் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக யூடியூபா்கள் இருவா் மீது 5 பிரிவுகளின் கீழ் மதுரை மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக யூடியூபா்கள் இருவா் மீது 5 பிரிவுகளின் கீழ் மதுரை மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
யூடியூபா்கள் தமிழன் கோகுல், பிஸ்மி ஆகியோா் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து ஆதாரமற்ற அவதூறுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பதாகவும், கட்சித் தலைமைக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருவரும் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும் நாம் தமிழா் கட்சியின் மீனவா் பிரிவு நிா்வாகி வழக்குரைஞா் தீரன் திருமுருகன் கடந்த 3-ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில், யூடியூபா்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோா் மீது மதுரை மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மு. காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தாா்.
Advertisement
Advertisement
ஆத்திரமூட்டும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசியது, பொது இடங்களில் ஆபாசமாகப் பேசியது, பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் ஒருவரை அவமதிப்பது, தவறான தகவல்களை மின்னணு சாதனங்கள் மூலம் பரப்புவது, ஆபாசத் தகவல்களை மின்னணு சாதனங்களில் பரப்புவது ஆகிய குற்றங்களின் அடிப்படையில், பி.என்.எஸ். சட்டம் பிரிவு 192, 296 (பி), 352, 353(1) (பி), தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2008 -ன் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சீமான் மீது அவதூறு பரப்பியவா்கள் மீது அரசியல் பாகுபாடின்றி காவல் துறை வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதன் அடிப்படையி,ல் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.