வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக மாறுமா?
வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி பற்றி...
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு உருவாகியிருக்கும் இரண்டாவது புயல் சின்னம் இதுவாகும்.
இந்த வாரத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்துக்கு இடையே வலுவிழந்து கரையைக் கடந்தது.
இந்த நிலையில், மீண்டும் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதால், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
A new low-pressure area has formed in the Bay of Bengal.
இதையும் படிக்க : ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.