FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விஜய்யின் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? நடிகை ஆவேசம்?

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது நடிகை கயாது லோஹர் ஆவேசம் என்று சமூக ஊடகங்களில் பதிவு

Updated On : 28 செப்டம்பர் 2025, 8:31 am IST
பகிர்:

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், தவெக தலைவர் விஜய் மீது நடிகை கயாது லோஹர் குற்றம் சாட்டியுள்ளார்.

``உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் பேரணியில் எனது நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்தேன். இவை எல்லாம் தவெகவின் சுயநல அரசியலுக்காக. விஜய், உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?’’ என்று நடிகை கயாது லோஹர் பதிவிட்டதாக சமூக ஊடகங்களில் தவறாகப் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!

summary

Karur Stampede: Actress Kayadu Lohar slams TVK Leader

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments