FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...

Updated On : 23 ஏப்ரல் 2026, 11:41 am IST
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

அதன்படி தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 மணி வரை 32.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதிவாரியாக விவரம்...

திருநெல்வேலி - 34.17%

அம்பாசமுத்திரம் - 36.85%

பாளையங்கோட்டை- 29.81%

நான்குனேரி - 32.23%

ராதாபுரம் -32.04%

அதிகபட்சமாக திருப்பூர் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு - 41% நாமக்கல் - 41.41% சேலம் - 40.56% வாக்குகள் பதிவு.

சேலம் மாவட்டம் 11 மணி நிலவரம்

கெங்கவல்லி - 40.47

ஆத்தூர் - 42.51

ஏற்காடு - 39.24

ஓமலூர் - 39.57

மேட்டூர் - 41.01

எடப்பாடி - 39.94

சங்ககிரி - 42.49

சேலம் மேற்கு - 39.67

சேலம் வடக்கு - 39.91

சேலம் தெற்கு - 40.62

வீரபாண்டி - 41.21 வாக்குப்பதிவு.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கின்றனர். மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

கடந்த 2021 தேர்தலில் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

summary

37.56 percentage voter turnout till 11 am in Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments