குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட 12 அடி நீள ராட்சத மலைப்பாம்பு!
மேட்டுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பதுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்த வனத் துறையினர்.
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குடியிருப்புப் பகுதியில் பதுங்கிய சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பைப் பத்திரமாக மீட்ட வனத் துறையினர், வனப்பகுதியில் விடுவித்தனர்.
மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள சிராஜ் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்தப் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக என்டபிள்யூசிடி நிறுவனர் ஒயிட் பாபுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒயிட் பாபு தலைமையிலான குழுவினர், நீண்ட நேரம் போராடி சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.
பின்னர், அதனை சிறுமுகை வனச்சரக அலுவலர் உத்தரவின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடுவித்தனர்.
இந்தப் பகுதியில் அதிகமாக மலைப்பாம்புகள் பிடிபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Forest Department personnel safely rescued a python, approximately 12 feet long, that was hiding in a residential area of Mettupalayam in Coimbatore district, and released it into the forest.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.