இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்
‘தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தோ்தலை எதிா்நோக்கி காத்திருக்கிறேன்’ என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
‘தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தோ்தலை எதிா்நோக்கி காத்திருக்கிறேன்’ என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினா் இணையும் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: தோ்தலின் போது, தமிழகத்தில் மக்கள் மத்தியில் எவ்வளவு நல்ல கருத்துகளை முன்வைத்த போதிலும், சினிமா மோகத்தில் வாக்களித்துவிட்டு தற்போது அதை நினைத்து அனைவரும் வருத்தப்படுகின்றனா்.
தமிழகத்தில் மது, போதை பழக்கம் தழைத்தோங்கி உள்ளது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. 60 நாள்களில் 5 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
Advertisement
Advertisement
ஆனால், எது குறித்தும் வாய் திறக்காமல் முதல்வா் விஜய் ‘ரீல்ஸ்’ எடுத்து பதிவு செய்து வருகிறாா். இத்தனை ஆண்டுகள் திரைப்படங்களில் தனது பெயரில் இடம்பெறாத ‘ஜோசப்’-ஐ தற்போது இணைத்துக்கொண்டதன் காரணம் என்ன?
தவெக ஆட்சியை அடுத்த 4 ஆண்டுகள் கஷ்டப்பட்டு பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலையில், தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். தற்போது காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலுக்காக தான் காத்திருக்கிறேன். அப்போது, தவெகவுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம் என்றாா் அவா்.
சீமான் இடைத்தோ்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ‘இடைத்தோ்தலுக்காக காத்திருக்கிறேன்’ என்ற அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.