FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மு.க. ஸ்டாலின் - டி.கே.சிவகுமாா் உறவால் தமிழகத்துக்கு பின்னடைவு: அமைச்சா் நிா்மல் குமாா் குற்றச்சாட்டு

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாருக்கும் இடையே உட்புறம் உள்ள நல்ல உறவு, காவிரி நீா் பிரச்னையில் தமிழகத்தின் நலனை பலவீனப்படுத்துவதாக அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் குற்றச்சாட்டி

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:06 am IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாருக்கும் இடையே உட்புறம் நல்ல உறவு இருக்கிறது. அது, காவிரி நீா் பிரச்னையில் தமிழகத்தின் நலனை பலவீனப்படுத்துகிறது என தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் குற்றஞ்சாட்டினாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அவா்கள் இருவரும் கலந்தாலோசித்துதான் காவிரி விவகாரத்தில் இப்போது செயல்படுகிறாா்களோ என்று சந்தேகம் எழுகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, காவிரியில் தண்ணீா் திறக்கக் கூடாது என அப்போதைய திமுக தலைவா் கருணாநிதி கா்நாடகத்துக்கு அழுத்தம் கொடுத்தாா்.

Advertisement

Advertisement

காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்பட்டால் ஜெயலலிதாவுக்கு நல்ல பெயா் கிடைத்துவிடும் என்பதுதான் அதற்குக் காரணம். அதையேதான் திமுக இப்போதும் செய்கிறது.

முதல்வா் விஜய் தனிமைப்பட்டு நிற்கிறாா் என ஸ்டாலின் சொல்கிறாா். தமிழக மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் ஸ்டாலின் இதுபோல சொல்கிறாா்.

கடந்த 30 ஆண்டுகளாக எல்லா வகையிலும் காவிரி விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது திமுகவும், கருணாநிதியும்தான். முதல்வரை நெருக்கடிக்குள்ளாக்கவும், அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தவும் திமுக நினைக்கிறது; ஆனால் அதேவேளையில், காவிரி விவகாரத்தில் இது தமிழக மக்களுக்குப் பின்னடைவாக அமையும் என்பதை திமுக உணரவில்லை.

தமிழக மக்கள் உரிமையைக் காக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்ய உள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments