FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கொல்லிமலை மலைப்பாதையில் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

கொல்லிமலை மலைப்பாதையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 10:14 am IST
கொல்லிமலை மலைப் பாதை - கோப்புப்படம்
பகிர்:

வல்வில் ஓரி விழாவையொட்டி, கொல்லிமலையில் 2 நாள்களுக்கு ஒருவழிப் போக்குவரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட கடைஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், அவரது கொடைத்தன்மையையும் போற்றும் வகையில் ஒவ்வோரு ஆண்டும் ஆக. 2, 3 (ஆடி 17, 18) ஆகிய நாள்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வல்வில் ஓரி விழாவையொட்டி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், மலைப்பாதையில் ஆக. 2, 3 ஆகிய இரண்டு நாள்களுக்கு தற்காலிகமாக ஒருவழிப் போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி, கொல்லிமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் காரவள்ளி மலைப்பாதை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல், கொல்லிமலையில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் முள்ளுக்குறிச்சி மலைப்பாதை வழியாக மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய இடங்களில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளியில் செயல்படும் ஒரு மதுபான சில்லறை விற்பனைக் கடை என 4 கடைகளும் ஆக. 1, 2, 3 ஆகிய நாள்களில் கட்டாயம் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், ஆக. 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

In connection with the Valvil Ori Festival, one-way traffic has been implemented on Kolli Hills for two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments