சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் 3 அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு 221 ஆவது நாளையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் மூன்று அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை குறித்து...
சங்ககிரி: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு 221 ஆவது நாளையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் தீரன் சின்னமலை உருவப் படத்துக்கும், அவரது நினைவு சின்னத்திலும் தமிழக அரசு சார்பில் மூன்று அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை(ஆகஸ்ட் 3 மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் சூழ்ச்சி செய்து சிறைபிடிக்கப்பட்டு, ஆடி 18-ஆம் தேதி சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் அவர் தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தில், அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
நிகழாண்டு சங்ககிரி மலைக் கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு அரசு சார்பில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோா் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் ஈரோடு-பவானி பிரிவு சாலையில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் லட்சுமணன், பழனிவேல், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கேந்திரியா, கோட்டாசியர் கோமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Dheeran Chinnamalai Memorial Day in Sankagiri: Three Ministers pay floral tributes on behalf of the Tamil Nadu government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.