FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

துரித வேகத்தில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?

துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நவம்பரில் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பற்றி..

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 12:43 pm IST
உயர்நிலை சாலை - Express
பகிர்:

செயல்பாட்டில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே கட்டப்பட்டு வரும் நாட்டின் முதல் மேம்பால சாலைப் பணிகள் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சாலை நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே அமைக்கப்பட்டு வரும் இந்த உயர்நிலை சாலை திறக்கப்பட்டால், இந்த வழித்தடப் பயண நேரம் 30 நிமிடங்களிலிருந்து வெறும் 5 நிமிடங்களாகக் குறையும் என்பதால், இப்பகுதி வாகன ஓட்டிகளின் கனவாக இந்த மேம்பாலம் மாறியிருக்கிறது.

தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு உள்ளிட்ட 7 முக்கிய சாலை சந்திப்புகளைக் கடக்கும் வகையில் 3.20 கி.மீ. தொலைவுக்கு ரூ. 621 கோடியில் நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கும் பணிகள் தற்போது 70 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

தற்போது 1.9 கிலோ மீட்டர் தொலைவிலான மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மேலும், 69 மேம்பாலத் தூண்களில் 46 தூண்கள் அமைக்கப்பட்டுவிட்டன. அண்ணாசாலைப் பகுதியில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மெட்ரோ சுரங்கப் பாதை 14 - 15 மீட்டர் தொலைவுக்குச் செல்கிறது.

சுரங்கப்பாதைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், மேம்பாலத்திற்கான அடித்தளங்களை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழம் வரை மட்டுமே துளையிட்டனர். மொத்தம் 3.2 கி.மீ நீளமுள்ள இப்பாதையில், 2.4 கி.மீ தூரம் மெட்ரோ சுரங்கப்பாதைக்கு நேர் மேலே அமைகிறது; இதில் தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ நிலையங்களுக்கு மேலாகச் செல்லும் 460 மீட்டர் பகுதியும் அடங்கும். மீதமுள்ள 655 மீட்டர் தூரம் மெட்ரோ வழித்தடம் இல்லாத பகுதியில் அமைந்துள்ளது.

இந்தப் பணிகள் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை இல்லாத இடத்தில், 655 மீட்டா் நீளத்துக்கு, 22 தூண்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த இடத்தில் நிலத்தூண் அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை உள்ள இடத்தில் 1,955 மீட்டா் தொலைவுக்கு, 69 தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாலத்தின் அழுத்த திறன், சுரங்கப் பாதை மேல் அடுக்கில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மைக்ரோ பைல் என்ற புதிய தொழில்நுட்ப முறையில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தற்போது ஜீயோ சிந்தெட்டிக் என்ற முறையில் மண்ணின் தாங்குத் திறன் அதிகரிக்கும் வகையில், ஜீயோ செல், ஜீயோ டெக்ட்டில்ஸ் மற்றும் ஜீயோ கிரிட் போன்ற ஏழு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

மண்ணின் தாங்குத் திறனை சோதனை மாா்ச் 26-இல் நடைபெற்றது. 460 மீட்டா் நீளத்துக்கு தேனாம்பேட்டை, நந்தனம் மெட்ரோ நிலையங்களில், 41 சட்டகம் அமைக்கப்பட்டு, உயா்நிலை பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் முடிவடைந்து செப்டம்பரில் திறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போதுமான தொழிலாளர்கள் கிடைக்காததால், பணிகள் தாமதமாகியிருக்கிறது. மேலும், இரவில் மட்டுமே பணிகள் நடைபெற்று வந்ததும், காரணமாகியிருக்கிறது. எனவே, பணிகள் நவம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்.

இப்பகுதியில் கடும் நெரிசலில் சிக்கி பயணித்த வரும் வாகன ஓட்டிகள் எப்போது இந்த மேம்பாலம் திறக்கப்படும் என்று காத்திருக்கிறார்கள்.

-பி. அன்புசெல்வன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments