தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்
தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என செங்கோட்டையன் பேசியது பற்றி...
தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) பேசியுள்ளார்.
சென்னை பனையூரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது:
அவர்களால் (திமுக) தூங்க முடியவில்லை. அவர்களுக்கு தூக்கம் வருவதில்லை. ஆகவே, அவர்கள் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பெண்களை இழுவுபடுத்துவதை எல்லோரும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன் பொன்முடி செய்தார். பெண்கள் குறித்துப் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசும் தகுதி அவர்களுக்கு இல்லை என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
ஆகவே, நம்மைப் பொறுத்தவரையில், இன்றைக்கு நாம் தெளிவான சிந்தனையோடும் தொலைநோக்குச் சிந்தனையோடும் உள்ளோம். இந்திய வரலாற்றில் முன்னோடி மாநிலங்ளில் ஒன்றாகவும், வழிகாட்டி மாநிலமாகவும் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் முதல்வர் விஜய்யின் ஆசை.
நாளை தேர்தல் வைத்தால்கூட, 234 தொகுதியிலும் நாம்தான் வெற்றி பெறுவோமே தவிர, வேறு எவராலும் வர முடியாது. இதுதான் தமிழ்நாட்டின் வரலாறு. ஆகவேதான் அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். பேரனுக்கு தாத்தாவின் சொத்துமீது ஆசை இருக்கலாம். ஆனால் மீண்டும் தாத்தாவைப் போல வரலாம் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நம்முடைய தலைவர் இருக்கும்வரை, அவர் முதல்வர் அறையில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர் பொறுப்பேற்றபோது 100 நாள்கள் கூட இருக்காது என்றார்கள். ஆனால், அவர் உயிருள்ளவரை தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
தவெக தலைவர் விஜய்யைப் பொறுத்தவரை, அவர் இருக்கும் வரை நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைக்கிற தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதை அவர்களால் பொறுத்துக் கொள்ளவில்லை. ஆகையால் பல்வேறு வகையில் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, பெண்களை இழிவுபடுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டது சரிதான். கைது செய்யப்பட்டது பெண்களை இழிவுபடுத்தியதற்காகத்தான். இதுபோன்ற தவறுகளை எவரும் செய்யக்கூடாது என்பதுதான் மக்கள் உள்ளங்களிலே நிறைந்திருக்கிறது என்று செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
Revenue Minister Sengottaiyan stated on Tuesday (August 4) that the DMK is unable to tolerate the TVK government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.