விஜய் இனி பேசாமலிருப்பதே நல்லது என நினைக்கிறது திமுக: செங்கோட்டையன்
முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசாமல் இருப்பதே நல்லது என திமுகவினர் நினைப்பதாக செங்கோட்டையன் பேசியது குறித்து...
முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசாமல் இருப்பதே நல்லது என திமுக நினைப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜூன் 28) விமர்சித்தார்.
இது தொடர்பாக கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
''முதலமைச்சர் விஜய்யின் ஆற்றல், சிந்தனை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வேகத்தைப் பார்த்தபிறகு, இவர் பேசாமலிருப்பதே நமக்கு நல்லது என அவர்கள் (திமுகவினர்) நினைத்துவிட்டார்கள்.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய் மீதான விமர்சனத்தை சட்டப்பேரவையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும். கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தவர்கள், முதல்வர் பேச ஆரம்பித்ததும் வெளிநடப்பு செய்தது ஏன்?
நீங்கள் இறுதி வரை இருங்கள்; உங்களின் எந்தவித கருத்துக்கும் பதில் கூறுகிறோம் என சட்டப்பேரவைத் தலைவர் கூறினார். இதற்கு முந்தைய ஆட்சியில் அப்படி நடந்ததில்லை. ஆனால் அதனை நாங்கள் வரவேற்றோம்.
திமுக ஆட்சியில் ஆற்காடு வீராசாமி துறை நிர்வாகத்தில் நடந்தது அனைவரும் அறிந்ததே. ஒரு ஆட்சி போனதற்கு காரணமே மின்வெட்டுதான்.
பகலில் பீஸ் கேரியர் திருடுபோவதாக கூறுகின்றனர். அணில் கடித்து மின்வெட்டு வந்தது என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இதையெல்லாம் திரும்பி திரும்பி பேசிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது.
நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்களின் எண்ணம்'' எனக் குறிப்பிட்டார்.
DMK feels it is better for Vijay to remain silent: Sengottaiyan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.