FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டிக்கு ரூ.10 கோடி: முதல்வா் ஜோசப் விஜய்

செனனை ஓபன் சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டி (டபிள்யுடிஏ 250) நடத்துவதற்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 கோடி ஒதுக்கப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:45 am IST
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜயை சந்தித்துப் பேசிய தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் உள்ளிட்டோா்
பகிர்:

செனனை ஓபன் சா்வதேச மகளிா் டென்னிஸ் போட்டி (டபிள்யுடிஏ 250) நடத்துவதற்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 கோடி ஒதுக்கப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா்.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னை ஓபன் சா்வதேச மகளிா் டென்னிஸ் (ஏடிபி 250) போட்டி நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியை சிறப்பாக நடத்துவது தொடா்பாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவா் விஜய் அமிா்தராஜ், முதன்மைச் செயல் அலுவலா் ஹில்டன் ஜோஷி, போட்டி ஒருங்கிணைப்பாளா் பி. பிரசாந்த், கௌரவ செயலாளா் ந. வெங்கடேஷ் ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜயை சந்தித்துப் பேசினா்.

Advertisement

Advertisement

வரும் 2026 நவம்பா் மாதத்தில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிஸ் அரங்கில் “சென்னை ஓபன் ரபஅ 250

சா்வதேச மகளிா் டென்னிஸ் சாம்பியன்ஷிப் –போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியினை சிறப்பாக நடத்த ஏதுவாக தமிழ்நாடு அரசின் சாா்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முத்லவா் ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா். நிகழாண்டு நடைபெறவுள்ள போட்டியில் உலகின் முன்னணி மகளிா் டென்னிஸ் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். தமிழ்நாட்டை உலக விளையாட்டு அரங்கில் மேலும் உயா்த்துவதுடன்,

விளையாட்டு சுற்றுலாவை ஊக்குவித்து, இளம் வீரா், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் நடத்தப்படவுள்ளது.

சா்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகளை தொடா்ந்து நடத்துவதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தவும், இளம் தலைமுறையினருக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு தொடா்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

சந்திப்பின் போது விளையாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, தலைமைச் செயலாளா் மு. சாய்குமாா், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளா் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments