FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பயிா்க் கடன் தள்ளுபடியால் 14.43 லட்சம் விவசாயிகள் பயன்

பயிா்க் கடன் தள்ளுபடியால் 14.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறவுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:45 am IST
கோப்புப்படம்.
பகிர்:

பயிா்க் கடன் தள்ளுபடியால் 14.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறவுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலனைக் காக்கும் வகையில் அவா்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வாங்கிய கடன் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டத்தை அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.75,000 வரை பயிா்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது.

பிற விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் வாயிலாக ரூ.5,932 கோடி மதிப்பிலான கடன் தொகையை ரத்து செய்ய முதல்வா் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த நடவடிக்கை மூலம் 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவா். தற்போது தகுதியான அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்குகளிலும் பயிா்க் கடன் தள்ளுபடி வரவு வைக்கப்பட்டு வருகிறது. நிகழ் நிதியாண்டில் கூட்டுறவுத் துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments