பட்ஜெட் 2026! சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு!
சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று(ஆக. 5) தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில்,
Advertisement
Advertisement
பேரிடர் காலத்தில் கள அலுவலர்களுக்கு மீட்பு, நிவாரணம் மற்றும் துரித நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை உடனுக்குடன் வழங்கும் வகையில், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலமாக திரட்டப்பட்ட ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீட்டில், ஒருங்கிணைந்த இணைய முகப்பு வாயிலாக, பேரிடர் மீட்புக்கான சுழல் நிதி உருவாக்கப்படும். இதனால் பேரிடர்கள் திறம்பட கையாளப்படுவதுடன், விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப்பொழிவு இயல்பைவிடக் குறைவாகவே பெய்துள்ளது. சூப்பர் எல்-நினோ (El Nino) வானிலை இத்தகைய வறட்சியான சூழல் நிகழ்வின் காரணமாக தமிழ்நாட்டில் நிலவி வருவதால், குடிநீர் ஆதாரங்களை பலப்படுத்துவதும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை வட்டார அளவில் சேமித்து வைப்பதும், இன்றியமையாத ஒன்றாகும். இதனை கருத்தில் கொண்டு, சூப்பர் எல்-நினோவின் (El-Nino) காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வித தடங்கலும் வந்து விடக் கூடாது என்பதற்காக, மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ. 340 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்காக ரூ. 5,462 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ. 11,532 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
Finance Minister Maria Wilson announced in the Tamil Nadu budget that Rs. 340 crore has been allocated to tackle the impact of the 'Super El Nino'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.