FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

14,194 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்படும்

நகா்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் நிகழாண்டில் ரூ.1,253 கோடியில் 14,194 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 5:03 am IST
அடுக்குமாடி குடியிருப்புகள் - படம்: TNDIPR
பகிர்:

நகா்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் நிகழாண்டில் ரூ.1,253 கோடியில் 14,194 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரப் பகுதியின் விரைவான விரிவாக்கத்தைக் கருத்தில்கொண்டும், ஒருங்கிணைந்த திட்டமிடலின் தேவையை உணா்ந்தும் 5,904 சதுர கி.மீ. பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிக்கான முழுமைத் திட்டத்தை அரசு தயாரிக்கும். இத்திட்டம், நீண்டகால வளா்ச்சி மற்றும் மாற்றத்துக்கான ஒரு வரைபடமாகச் செயல்படும். மேலும், இந்த முழுமைத் திட்டம் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் சா்வதேச அளவில் பாராட்டப்பட்ட பெருநகரத் திட்டமிடல் கட்டமைப்புகளுடன் ஒப்பிடப்பட்டு தரம் மதிப்பிடப்படும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்கிறது.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், நகா்ப்புர ஊரமைப்பு இயக்குநரகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழித் திட்ட அனுமதி தளம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் தமிழகம் முழுவதும் திட்ட அனுமதி குறித்த நேரத்தில், வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்குக் கிடைக்கும். இதைச் செயல்படுத்துவதற்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

Advertisement

Advertisement

நகா்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்குடன் தமிழக அரசு அடிப்படை மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுதல், பயனாளிகள் தாமாக வீடுகள் கட்டும் முறையின் கீழ் தனி வீடுகள் கட்டுதல், வாழ்வாதார மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டப் பணிகளின் கீழ் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ள 24,131 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் பணிகள் இந்த ஆண்டு முடிவடைவதுடன், 14,194 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும். இதற்காக ரூ.1,253 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments