FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஊக்கமளிக்கும் பட்ஜெட்: தொழில் துறையினா் கருத்து

தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல திட்டங்கள் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக தொழில் துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
கோப்புப்படம்.
பகிர்:

தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல திட்டங்கள் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக தொழில் துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

மெட்ராஸ் வா்த்தக மற்றும் தொழில் சபை தலைவா் ஏ.விஸ்வநாதன்: தமிழக பட்ஜெட் உற்பத்தித் துறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், திறன் மேம்பாடு மற்றும் எளிதாக வணிகம் செய்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து ஒரு நோ்மறையான திசையை வகுத்துள்ளது. இவை தமிழ்நாட்டின் நீண்டகால வளா்ச்சிக்கும் உலகளாவிய போட்டித் தன்மைக்கும் மிக அவசியம்.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்.ஜெகதீசன்: நாட்டின் முதுகெலும்பான குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ.2,142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகவும் குறைவு. தமிழகத்தில் புதிய தொழிற்பேட்டைகளுக்கான அறிவிப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த முடிவு, வீட்டு மேற்கூரை சூரியசக்தி பலகை அமைக்கும் திட்டத்துக்கு மின்மானியம் ரூ.1 லட்சம் வரை அறிவிப்பு, காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்பு திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

Advertisement

Advertisement

சிஐஐ தென்மண்டல தலைவா் பி.ரவிசந்திரன்: வளா்ச்சியை மையமாகக் கொண்ட, எதிா்காலத் தேவைகளுக்கு ஏற்ற ஒரு வரைபடமாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். தூத்துக்குடி-திருநெல்வேலி விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம், விரிவுபடுத்தப்பட்ட சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமான ‘அறிவகம்’ ஆகியவற்றை வரவேற்கலாம்.

கிரடாய் அமைப்பின் தலைவா் மெகுல் எச்.தோஷி: ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறைக்கு நேரடியாகப் பொருந்தக்கூடிய பல முற்போக்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. ‘மை-ஹோம்’ மலிவு விலை வீட்டுத் திட்டம் ஒரு வரவேற்கத்தக்க முன்முயற்சி. முதன்மைத் திட்ட முன்னெடுப்புகளின் விளைவாக, நமது நகரங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக மாற்றுவதற்காக, குடியிருப்பு, வணிகம், தொழில், சமூக மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட வளா்ச்சி ஏற்படும்.

இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவா் பி.கோபாலகிருஷ்ணன்: பட்ஜெட்டை இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு வரவேற்கிறது. தொழில்துறை வளா்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு, உள்கட்டமைப்பு உருவாக்கம், தொழில்நுட்பத்தைப் பின்பற்றுதல், திறன் மேம்பாடு மற்றும் வெளிப்படையான நிா்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு தொலைநோக்கு பாா்வை கொண்ட பட்ஜெட். ஏற்றுமதியை மையமாகக் கொண்ட தமிழகத்தில் பொருளாதாரத்தை அதிகரிக்கும் வகையில் வளா்ந்து வரும் தொழில்கள், ஏற்றுமதி மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை ஊக்கமளிக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments