FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை: முக்கிய அம்சங்கள்!

தமிழ்நாடு வேளாண் நிதிநிலையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 10:59 am IST
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத் - டிஎன்எஸ்
பகிர்:

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத் வியாழக்கிழமை காலை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் நேற்று (ஆக. 5) தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இன்றைய வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக. 6) முதல்முறையாக தாக்கல் செய்தும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.

Advertisement

Advertisement

உழுவார் உலகத்தார்க்கு ஆண்அஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து எனும் திருக்குறளுடன் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்.

* வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* எல் நினோவால் 12 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கான மும்முனை இலவச மின்சாரம் தொடரும். இந்த திட்டத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம் அறிமுகம் செய்யப்படும்.

* உழவர் அடையாள அட்டை பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை வழங்கப்படும்.

* புதிய இயற்கை வேளாண் தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.

* நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்துக்கு மாநில அரசின் சிறப்பு திட்டத்துக்கு ரூ.34.72 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2026-27 ஆம் ஆண்டில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம்.

* மண்வள பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ.122.51 கோடி நிதி ஒதுக்கீடு

* உழவர் செய்யறிவு திட்டம்(ஏஐ) செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

* சாமை, திணை, வரகு உள்ளிட்ட தமிழ்நாடு குறுதானிய இயக்கம் தொடங்கப்படும். இதற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு.

* மக்காச்சோளம் உற்பத்தியை அதிகரிக்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.

* பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவு இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி நிதி ஒதுக்கீடு.

* பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.

* அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 சதவீதம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பாம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு.

* காட்டுப்பன்றிகளிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேத தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு.

* விவசாய நிலங்களில் நிரந்தர பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு.

நம்மாழ்வார் விருது

* ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு.

* மூன்று புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு.

* கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காக கறும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.

அஞ்சலை அம்மாள் விருது

* அஞ்சலை அம்மாள் பெயரில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

* திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.56 கோடி நிதி ஒதுக்கீடு.

* 17,315 ஏர்க்கர் விதைக்கரும்பு மானியம் வழங்க ரூ.9.36 கோடி நிதி ஒதுக்கீடு.

* பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி மற்றும் பனை பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

வெற்றி இல்லதரசி வீட்டு தோட்டம்

* வெற்றி இல்லதரசி வீட்டு தோட்டம் திட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள், நீரியல் தோட்டம். செங்குத்து தோட்டம், நிழல்வலை குடில்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டம். இத்திட்டத்திற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு

* தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்கு ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் சாமந்தி சாகுபடியை ஒளியூட்டி ஊக்குவித்தல், பழ உறைகள், குலை உறைகள், பசுமைக்குடில், நிழல்வலை குடில், நிரந்தர பந்தல் அமைத்தல், வாழை விழாமல் இருக்க முட்டு கொடுத்தல் உள்ளிட்டவை வழங்கி விவசாயிகளுக்கு உதவப்படும்.

நன்னெறி சாகுபடி

* நஞ்சற்ற உற்பத்தி மற்றும் உலகளாவிய ஏற்றுமதிக்காக ரூ.8.42 கோடி நிதி ஒதுக்கீடு.

* தென்னை சிறப்பு திட்டத்திற்காக ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு.

summary

Regarding the key features of the Tamil Nadu Agriculture Budget...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments