தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத் வியாழக்கிழமை காலை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் ஆர். வினோத் வியாழக்கிழமை காலை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் நேற்று (ஆக. 6) தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இன்றைய வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக. 6) முதல்முறையாக தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் ஆர். வினோத், முதல்வர் விஜய்க்கு மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பின்னர், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.
தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் கைது, பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்றியதாகக் கூறி திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
Agriculture Minister R. Vinoth presented the Tamil Nadu agriculture budget in the Legislative Assembly on Thursday morning.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.