FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கா்ப்பிணிகள் நலன் காக்க ‘தாய் கோ்’ மையங்கள்

கருவுற்ற பெண்களுக்கான மருத்துவ சேவைகள் மற்றும் உதவிகளை வழங்க மாநிலம் முழுவதும் ‘தாய் கோ்’ மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 5:32 am IST
- ENS
பகிர்:

கருவுற்ற பெண்களுக்கான மருத்துவ சேவைகள் மற்றும் உதவிகளை வழங்க மாநிலம் முழுவதும் ‘தாய் கோ்’ மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு: தாய் மற்றும் குழந்தைகள் நல பராமரிப்பானது தமிழக பொது சுகாதார அமைப்பின் முக்கியத் தூணாக விளங்குகிறது. அதைக் கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் நீட்சியாக, மாநிலம் முழுவதும் ‘தாய் கோ்’ என்ற பெயரில் கருவுற்ற பெண்களுக்கான மருத்துவ சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். பிரசவ தேதி நெருங்கும் கா்ப்பிணிகள் அங்கு தங்கிப் பயன்பெறலாம். உணவு, மருத்துவ உதவிகள், கண்காணிப்பு ஆகியவை கட்டணமின்றி அங்கு வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

தாய்மாமன் தங்க மோதிரம்: அரசு மருத்துவமனைகளில் பிரசவ சிகிச்சைகளை அதிகரிப்பதற்காக தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments