FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விஜய் - த்ரிஷா பற்றி சர்ச்சைப் பேச்சு... உதயநிதியின் கைதுக்கு மலையாள நடிகர் தியான் ரிப்ளை!

முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா பற்றிய சர்ச்சைப் பேச்சு குறித்த பதிவுக்கு மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் நகைச்சுவை பதில்...

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 5:58 pm IST
விஜய் - த்ரிஷா - தியான் - உதயநிதி.
பகிர்:

முதல்வர் விஜய் மற்றும் த்ரிஷா பற்றிய சர்ச்சைப் பேச்சு குறித்த பதிவுக்கு மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் நகைச்சுவையாக பதிலளித்திருக்கிறார்.

காவிரி விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரியும் தஞ்சாவூர் அண்ணா சாலையில் திமுக சார்பில் ஆக. 3 ஆம் தேதி ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய், நடிகர் த்ரிஷா மற்றும் பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறி தவெக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ச. பைரவி, தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisement

Advertisement

அதைத் தொடர்ந்து, உதயநிதியின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, ஆக. 4 அவர் கைது செய்யப்பட்டு தஞ்சை செங்கிப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு, 10 மணிநேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

உதயநிதி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட விடியோக்கள் வலைதளங்களில் பல்வேறு போன்மிக்களாக (மீம்ஸ்) பகிரப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன்னதாக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சையாகப் பேசியிருந்த மலையாள நடிகர் தியானின் விடியோ ஒன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறது.

மலையாளத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தியான் ஸ்ரீனிவாசன். இவர் மறைந்த பிரபல நடிகர் ஸ்ரீனிவாசனின் இளைய மகன், மற்றும் நடிகர் வினீத் ஸ்ரீனிவாசனின் தம்பி. இவர் நடிக்கும் ‘விசிட்டர்’ படத்தின் அறிவிப்பு விழா கொச்சியில் கடந்த ஜூலையில் நடைபெற்றது.

அப்போது தியான் பேசுகையில், “நான் கேரளத்தின் முதல்வராகப் பதவியேற்கும் நடிகை நவ்யா நாயர் கண்ணீருடன் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். இப்போது நவ்யாவுக்கு திருமணமாகி இப்போது ஒரு மகனும் இருக்கும் சூழலில் நாங்கள் ஒரு படத்திற்காக இணைந்திருக்கிறோம்.

இருப்பினும், நான் முதலமைச்சராக பதவியேற்கும் அந்தத் தருணத்தில், நடிகை நவ்யா முதல் வரிசையில் புடவை கட்டியபடி கண்கலங்கியபடி உட்கார்ந்திருப்பார்” என்று முதல்வர் விஜய் பதவியேற்கும் போது நடிகை திரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்ததைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு அப்போது விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, வாய் பேச முடியாதவராக நடித்து 2008 ஆம் ஆண்டு வெளியான ‘அண்ணன் தம்பி’ என்ற படத்தில் வரும் காட்சியை வைத்து உதயநிதி கைது செய்யப்ப்பட்டதையும், தியான் ஸ்ரீனிவாசனையும் ஒப்பிட்டு ஒரு மீம் விடியோ வெளியிட்டிருந்தனர். இந்த விடியோவில் பதிவிட்டுள்ள தியான் ஸ்ரீனிவாசன், “ஹாஹா... ‘அண்ணனும் அண்ணி என் உயிர் டா” என நக்கலாக கருத்துப் பதிவிட்டுள்ளார்.

தற்போது மம்மூட்டியின் விடியோ மீமும், தியான் கருத்துகளும் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

summary

Although Dhyan never mentioned Trisha Krishnan by name, many social media users connected his remarks to Vijay's swearing-in ceremony as Tamil Nadu Chief Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments