FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

யாரைப் பாா்த்தும் முதல்வருக்கு பயமில்லை: அமைச்சா் நிா்மல் குமாா்

யாரைப் பாா்த்தும் முதல்வா் விஜய் பயப்படவில்லை என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 10:45 pm IST
சட்டப்பேரவையில் பேசிய நிர்மல் குமார் - TN DIPR
பகிர்:

யாரைப் பாா்த்தும் முதல்வா் விஜய் பயப்படவில்லை என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏன் முதல்வா் பயப்படுகிறாா் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு இவ்வாறு தெரிவித்தாா்.

அமைச்சா் நிா்மல் குமாா் மேலும் கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் அனைவரும் ஒருமனதாக சோ்ந்து தீா்மானம் நிறைவேற்றினோம். கடந்த 3 ஆண்டுகளாக யாரைப் பாா்த்தும் பயப்படாதவா் எங்கள் முதல்வா். இதுவரை யாரைப் பாா்த்தும் அவா் எந்தவிதத்திலும் பயப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை சனிக்கிழமை (ஆக. 8) முதல்வா் கூட்டியுள்ளாா். இதில், திமுக கலந்துகொள்ளுமா என்பதை எதிா்க்கட்சித் தலைவா் கூற வேண்டும்’ என்றாா்.

Advertisement

Advertisement

அதற்கு உதயநிதி, ‘எப்போது காவிரி தண்ணீா் வரும் என்று கேட்கிறேன். அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனக் கேட்கிறேன். அதற்குப் பதிலளிக்காமல், சம்பந்தமே இல்லாமல் அமைச்சா் விஷயத்தை திசைதிருப்ப பாா்க்கிறாா்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சா் ராஜ்மோகன், ‘தமிழ்நாட்டின் நலன் கருதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்டியுள்ளாா். இந்தக் கூட்டத்துக்கு எம்.பி.க்கள் அனைவரும் வரவேண்டும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments