விதியை மீறி பேரவைக்குள் செல்போன் கொண்டு வந்த அமைச்சர்! அதைப் பார்த்து படித்ததால் அதிர்ச்சி!
விதியை மீறி, பேரவைக்குள் செல்போன் கொண்டு வந்த அமைச்சர் ஷாஜகான், அதைப் பார்த்து படித்ததால் அதிர்ச்சியடைந்தது பற்றி..
தமிழக சட்டப்பேரவைக்குள், செல்போன் கொண்டு வந்து, அதனைப் பார்த்து படித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானால், அவைத் தலைவர் அதிர்ச்சி அடைந்தார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 4வது நாளான இன்று பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
பேரவை தொடங்கியதும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் என்கிற கோமுகி மணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து இன்று பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் காரசார விவாதத்தில் பங்கேற்று பேசினர்.
அப்போது, பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகரன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானை பேச அழைத்தார். அவரும் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். ஆனால் பலருக்கும் அதிர்ச்சி. அவர் கையில் தன்னுடைய செல்போனை வைத்துக் கொண்டு அதைப் பார்த்து படிக்கத் தொடங்கினார். இதைக் கண்ட அவைத் தலைவர், உடனடியாகக் குறுக்கிட்டு, அவை உறுப்பினர்கள், பேரவைக்குள் செல்போன் கொண்டு வரக் கூடாது. அதுவும் அதைப் பார்த்து படிப்பது தவறு. இனி இதுபோன்று செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி, அடுத்த எம்எல்ஏவை பேச அழைத்தார்.
சட்டப்பேரவை விதிமுறைப்படி, அவைக்குள் செல்போன் கொண்டுவரக் கூடாது என்பதே அமைச்சருக்குத் தெரிந்திருக்கவில்லையே என்று உள்ளேயிருந்த எம்எல்ஏக்களை விடவும், அதனை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மக்கள்தான் அதிகம் வருத்தப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.