FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை சிரிக்க வைத்த பேச்சு! திமுக முன்னாள் அமைச்சரால் கலகலத்த பேரவை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யை சிரிக்க வைத்த முன்னாள் அமைச்சரின் பேச்சுகள்...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 11:42 am IST
முதல்வர் விஜய் - TN Assembly
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் பேச்சால் திங்கள்கிழமை சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று பேசினார்.

அப்போது, ” கடந்த 5 ஆண்டு காலம் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

Advertisement

Advertisement

ஓபிஎஸ் விவசாயி, அதிமுகவின் ஓ.எஸ். மணியன் பேரவையில் எழுந்து எங்களுக்கு ஆலோசனை கூறுவார். பாமக ராமதாஸ், அன்புமணி, சிவகுமார் ஆகியோர் கொடுக்கும் நிழல் பட்ஜெட்டின் அடிப்படையில் அவர்களது கருத்துகளை எடுத்துக்கொண்டு நாங்கள் பட்ஜெட் தயாரிப்போம். அனைத்து தரப்பினரும் எங்களைப் பாராட்டி பேசுவார்கள். அப்போது எங்களை பாராட்டியவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள்.

வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் என்று சேர்த்திருக்கிறீர்கள். அதேபோல இந்த ஆட்சிக்கும் முட்டுக்கொடுக்கிறார்கள்" என்று பேசினார்.

'முட்டுக்கொடுத்தல்' என்ற வார்த்தை மட்டும் அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாகவும் பேரவைத் தலைவர் கூறினார். அதற்கு பதிலாக வேறு வார்த்தையைக் கூறினால் சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. முதல்வர் விஜய்யும் சிரித்தார்.

தொடர்ந்து, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசும்போது, விவசாயிகள் 5 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இருந்ததாக எம்ஆர்கே பன்னீர்செல்வம் நல்ல திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார் என்றார்.

அவருக்கு பதிலளித்து பேசும்போது, ’மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர்’ எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக வாய்த் தவறி ’சாமி அமைச்சர்’ எனப் பேசியதால் முதல்வர் விஜய் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்.

மேலும், இப்போதுதான் எப்படி பிரசாரம் செய்கிறீர்கள் என்று தெரிகின்றது. அவர் பேசுவது உண்மையா? பொய்யா? என்று தெரியாதவாறு டெக்னிக்காக பேசுகிறார் என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தொடர்ந்து, தவெகவினரை நோக்கி நீங்களெல்லாம் படத்தைப் பார்த்து வந்தவர்கள். நாங்களும் அதிமுகவினரும் கொள்கையைப் படித்து, களத்தில் போராடி வந்தவர்கள் என்றார்.

summary

The speech that made Chief Minister Vijay laugh - Former DMK minister speech in Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments