FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்தார்!

முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனை பற்றி...

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 7:49 pm IST
சிங்கை ராமச்சந்திரன் - முதல்வர் விஜய்.
பகிர்:

அதிமுகவின் ஐ.டி. விங் மாநிலச் செயலராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், கடந்த மாதம் கட்சியிலிருந்து விலகிய நிலையில் இன்று முதல்வர் விஜய்யைச் சந்தித்து தவெகவில் இணைந்தார்.

அதிமுகவின் மாணவரணிச் செயலரும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தலைவருமாக செயல்பட்டு வந்தவர் சிங்கை ராமச்சந்திரன். மில் தொழிலாளியாக இருந்த வெற்றி பெற்றவரான சிங்கை கோவிந்தராசின் மகனான சிங்கை ராமச்சந்திரன், கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் பி. கணபதி ராஜ்குமார் ஆகியோரை எதிர்த்து அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டார்.

கணபதி 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், 2,36,490 வாக்குகளைப் பெற்ற சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்தையே பிடித்திருந்தார். அதன்பின்னர், அவருக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

அதிமுகவில் தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் கடந்த ஜூலை 23 ஆம் தேதி விலகிய சிங்கை ராமச்சந்திரன், முதல்வர் விஜய்யைச் சந்தித்து இன்று (ஆக. 11) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள சிங்கை ராமச்சந்திரன், “உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Singai Ramachandran, the former State Secretary of the AIADMK IT Wing, who quit the party last month, met TVK leader Vijay today and joined the party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments