FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைன் மூலம் மதுபானம் முன்பதிவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஆன்லைன் மூலமாக மதுபானம் முன்பதிவு செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 11:52 am IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மதுபானம் முன்பதிவு செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக்கில் மதுபானத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கும் நடைமுறை அமலாகியுள்ளது. ஆனால், ஆன்லைனில் முன்பதிவு செய்து டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானத்தை வாங்க முடியும் என்றும் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானம் கிடையாது என்றும் அமைச்சர் விக்னேஷ் கூறினார்.

இந்நிலையில் ஆன்லைன் மூலமாக மதுபானம் முன்பதிவு செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வழக்கறிஞர் பாலு என்பவர் தனது மனுவில் "அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மது குடிப்பவர்களுக்கு வசதி செய்து கொடுத்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும்.

ரேஷன் கடைகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய எந்த வசதியும் இல்லை. மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதேபோல மருத்துவமனைகளிலும் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

ஆனால் மதுபானத்திற்கு வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பெறலாம் என்ற நடைமுறை சரியல்ல. பெரியவர்கள் முன்பதிவு செய்யும் முகவரி மூலமாக சிறுவர்களும் முன்பதிவு செய்து யார் மூலமாகவும் வாங்க வாய்ப்புள்ளது.

எனவே, ஆன்லைனில் மது முன்பதிவு செய்வதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் தீர்வு காணும் வரை இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Case filed in Madras High Court against Online liquor booking in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments