வாட்டாள் நாகராஜ் கைது! ஒசூர் - பெங்களூரு இடையே பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்!
காவிரி நீர் விவகாரத்தில் வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், ஒசூர் - பெங்களூரு இடையே பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதைப் பற்றி...
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், ஒசூர் - பெங்களூரு இடையே பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் இன்று (ஆக. 13) முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இதனால், கர்நாடகம் முழுவதும் பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜை அவரது வீட்டில் முன்னெச்சரிக்கையாக பெங்களூரில் போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்தப் போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டியளித்ததைத் தொடர்ந்து கன்னட அமைப்புகள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக கூறியுள்ளன
கிருஷ்ணகிரியை ஒட்டிய எல்லைப் பகுதியில் இரு மாநிலங்கள் இடையே வழக்கம்போல் போக்குவரத்து இயக்கப்படுகின்றன. மேலும், ஓசூர் - பெங்களூரு இடையே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தேவைப்பட்டால் தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Amidst the general strike over the Cauvery water issue, buses between Hosur and Bengaluru are operating as usual.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.