தமிழகத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளைத் தொடக்கி வைத்தார் அமைச்சர் என். ஆனந்த்
தமிழகத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தது தொடர்பாக...
தமிழகத்தில் 'விபி ஜி ராம் ஜி' திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணிகளை நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
முதல்வா் விஜய் அறிவுறுத்தலின்பேரில், வளா்ச்சியடைந்த பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (விபி ஜி ராம் ஜி) கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீா்நிலைகள் மற்றும் வரத்து, பாசனக் கால்வாய்களைத் தூா்வாரி புனரமைப்பதன் மூலம், மழைநீரை முழுமையாகச் சேமித்து, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதுடன், விவசாயப் பாசன வசதிகளையும் மேம்படுத்த முடியும். மேலும், அதீத மழைப்பொழிவு ஏற்படும் காலங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளையும் தடுக்க முடியும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள புத்தூர் கிராம ஏரி வரத்து கால்வாயில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தார்.
ரூ.500 கோடியில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள், தமிழகத்தின் கிராமப்புற நீா்வளத்தைப் பாதுகாத்து, நீர்வளத்தை மேம்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் முக்கியமான முன்னெடுப்பாகும்.
இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் டி.சரத்குமார், செங்கல்பட்டு ஆட்சியர் டாக்டர் எம்.வீரப்பன், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.தியாகராஜன், திருப்போருர் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயராஜ், ஊராட்சித் துறை ஆணையர் வி.அமுதவல்லி மற்றும் துறைசார்ந்து அதிகாரிகள் பங்கேற்றனர்.
Minister N. Anand inaugurated the desilting of water bodies in Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.