FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் வரும்போது உதயநிதி எழுந்து நிற்க வேண்டுமா? பேரவையில் விவாதம்

பேரவைக்கு முதல்வர் விஜய் வரும்போது உதயநிதி எழுந்து நிற்க வேண்டுமா? என்று பேரவையில் விவாதம் நடைபெற்றது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:48 pm IST
முதல்வர் விஜய் - உதயநிதி வாதம் - TN Assembly
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பேரவைக்குள் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமர்ந்திருப்பது குறித்து தமிழக அமைச்சர் ரமேஷ், அவையில் கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்ற போது, சட்டப்பேரவையின் கண்ணியம் குறித்து முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ பன்னீர்செல்வம் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவையில் கண்ணியமாக பேச வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அதை முதல் முறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக வந்துள்ள நாங்கள் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

Advertisement

Advertisement

ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு முதலில் அவையின் கண்ணியத்தைக் கற்பிக்க வேண்டும். முதல்வர் விஜய் பேரவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பதில்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.

முதல்வருக்கு மரியாதை தர வேண்டும் என்ற கண்ணியத்தை எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்லித்தர வேண்டும், 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்வர் ஜோசப் விஜய் உள்ளே வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவையில் அமர்ந்திருக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பினார் அமைச்சர்.

இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா? கூடாதா? என்று அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கே.என். நேரு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றதில்லை என்று பதிலளித்து விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

summary

Should Udhayanidhi stand up when Chief Minister Vijay arrives? Debate in the Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments