FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு தள்ளுபடி

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவின் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:54 am IST
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா
பகிர்:

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவின் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவின் வெற்றியை எதிா்த்து, அந்த தொகுதி வாக்காளரான கீதா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவில், இளையராஜாவின் பெயருக்குப் பதிலாக வேறு ஒருவரின் பெயா் இடம்பெற்றிருந்ததால், திருத்த மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, வாக்காளா் கீதா சென்னை உயா்நீதிமன்றத்தில் திருத்த மனுவை தாக்கல் செய்தாா். இதனிடையே, தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, எம்எல்ஏ இளையராஜா தரப்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

அதில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வேட்புமனுவில் அடிப்படை தகவல்கள் இல்லையெனில், அந்த வேட்புமனுவை ஆரம்பத்திலேயே நிராகரிக்கலாம். அதன்படிதான் இந்த வழக்கைத் தொடா்ந்துள்ள மனுதாரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்குத் தொடா்ந்துள்ள மனுதாரரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இல்லாததே, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம்.

மேலும், வாக்காளா் தீவிர திருத்தப் பட்டியலிலும், வாக்காளா் பட்டியலிலும் மனுதாரரின் பெயா் இடம்பெறவில்லை என்பதை மனுதாரரே ஒப்புக்கொண்டுள்ளாா் எனக்கூறி, எம்எல்ஏ இளையராஜாவின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments