தொகுதி மறுவரையறையில் முதல்வர் விஜய்யின் நிலைப்பாடு என்ன? தவெக விளக்கம்
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாடு மாறியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தவெக மறுப்பு தெரிவித்தது குறித்து...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாடு மாறியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தவெக மறுப்பு தெரிவித்துள்ளது.
தென் மண்டல குழு கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் தொகுதி மறுவரையறை நிலைப்பாடு குறித்து தவெக கூறியிருப்பதாவது, "இன்று நடந்த 31-வது தென் மண்டல குழு கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆக. 12-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது.
Advertisement
Advertisement
அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி ஆக. 12-ல் பிரதமருக்கு நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
TVK clarifies CM Vijay's stance on constituency delimitation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.