சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானது குறித்து...
சிதம்பரம்: சிதம்பரம் அருகே தனது விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டாரை பழுது பார்ப்பதற்காக அருகில் இருந்த மின்மாற்றியில் இணைப்பைத் துண்டிப்பதற்காக சென்றபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.
சிதம்பரம் அருகே குமராட்சி வட்டம் முள்ளங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மணிகண்டன் (35). இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டாரை பழுது பார்ப்பதற்கு சனிக்கிழமை காலை தனது வயல் அருகே உள்ள மின் மாற்றியில் இணைப்பைத் துண்டிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, மணிகண்டன் மின்மாற்றியை கீழே இருந்து லிவரை வைத்து இணைப்பைத் துண்டித்துள்ளார். மின்மாற்றியில் இருந்து இணைப்பு துண்டிக்கப்படாததால் மின்கம்பத்தில் ஏறி மின் நிறுத்தம் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் மின்மாற்றியில் கருகிய நிலையில் தொங்கிய நிலை இருந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து குமராட்சி போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Farmer dies of electrocution near Chidambaram
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.