எரிவாயு சிலிண்டர் இ-கேஒய்சி அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
வீட்டு உபயோக சிலிண்டருக்கான இ-கேஒய்சி சுயவிவரத்தை பதிவு செய்ய காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
வீட்டு உபயோக சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் ஆக. 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டுத்தாக்குதலால், மத்திய கிழக்கு போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சிலிண்டர் முன்பதிவில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் கட்டாயமாக்கியுள்ளன.
Advertisement
Advertisement
மானியத்துடன் கூடிய சிலிண்டரை பெற்று வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதாகவும், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதாகவும், இறந்தவர்களின் பெயரில் உள்ள இணைப்புகளை வேறு சிலர் பயன்படுத்தி வருவதாகவும் சந்தேகம் எழுந்தது.
அதன் அடிப்படையில், கள்ளச் சந்தையில் சமையல் சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்கவும், சமையல் சிலிண்டர் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் முன்பதிவு செய்ய இ-கேஒய்சி அடிப்படையில் ஆதார் உள்ளிட்ட ஆணவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து போலி எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியானவர்களுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்யவும் இ-கேஒய்சி சரிபார்ப்பு பணிகளை ஏஜென்சி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-கேஒய்சி எனப்படும் உண்மை சரிபார்ப்பு பணிக்கு, கால அவகாசம் இன்றுடன் (ஆக. 23) முடிவடைய இருந்த நிலையில், வருகிற ஆக. 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிலிண்டர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வருகிற 31-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
With the deadline for e-KYC verification for domestic LPG cylinders nearing its end, the time limit has been extended until August 31.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.