சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நல்லிணக்கப் பெருவிழா! மு.க. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளது பற்றி...
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் முன்னிறுத்தும் அழகிய நல்லிணக்கப் பெருவிழாவான ஓணம் கொண்டாடும் மலையாள உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓணம் பண்டிகை கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.
இந்த ஆண்டு நாளை (ஆக. 26) ஓணம் பண்டிகை, வெகு சிறப்பாக கொண்டாடவுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கேரள மக்களின் அறுவடைத் திருநாளாகவும் பண்பாட்டுப் பெருவிழாவாகவும் ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரளம் மட்டுமில்லாமல், பூமிப்பந்தில் மலையாளிகள் வாழும் பகுதிகளில் எல்லாம் எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய விழாவாக ஓணம் திகழ்கிறது.
சூழ்ச்சிகளாலும் புனையப்பட்ட கதைகளாலும் மாவேலி மன்னனை மறக்கடிக்க நினைத்ததை முறியடித்து, ஆண்டுதோறும் அத்திராவிட அரசனை மக்கள் நினைவுகூரும் விழாவாக ஓணம் திகழ்கிறது. அறுசுவை உணவும் அழகிய புத்தாடைகளும் அத்தப்பூக்கோலமும் கலைநிகழ்ச்சிகளும் நிறைந்த வண்ணமயமான திருவிழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் வாழும் மலையாளச் சகோதரர்களும் இவ்விழாவை இனிதே கொண்டாட வேண்டுமென்ற பரந்த நோக்கத்தோடு, கேரள எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்காக விடுமுறை அளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கடந்த திராவிட மாடல் அரசிலும் இருமாநில உறவை வலுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை நானும் மேற்கொண்டேன். தோள்சீலைப் போராட்ட வெற்றியின் 200-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தோழர் பினராயி விஜயன் தமிழ்நாடு வந்தார். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவுக்காக நான் கேரளம் சென்றேன்,
அந்த வகையில், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் முன்னிறுத்தும் அழகிய நல்லிணக்கப் பெருவிழாவாக ஓணத்தைக் கொண்டாடி மகிழும் எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
MK stalin wishes for onam festival to keralam people
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.