ஆன்லைன் மது விற்பனை! தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
ஆன்லைன் மது விற்பனைக்கு தடை கோரிய மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மதுபானம் வாங்குவதற்கு முன்பதிவு செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீது நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில், ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு, நேரடியாக சென்று மதுபானம் வாங்கும் நடைமுறை அமலாகியது.
ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும் டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானத்தை வாங்க முடியும், வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும் என்றும் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானம் கிடையாது என்றும் அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்திருந்தார்.
Advertisement
Advertisement
ஆனால், ஆன்லைன் மூலமாக மதுபானம் வாங்க முன்பதிவு செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதியும் இல்லை. மருத்துவமனைகளிலும் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் மதுபானத்திற்கு வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பெறலாம் என்ற நடைமுறை சரியல்ல. மது குடிப்பவர்களுக்கு வசதி செய்து கொடுத்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும்.
எனவே, ஆன்லைனில் மது முன்பதிவு செய்வதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வழக்கில் தீர்வு காணும் வரை இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இது குறித்து நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Case seeking a ban on online liquor sales: Government ordered to respond within four weeks.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.