FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை புழல் சிறைக்குச் சென்றார் முதல்வர் விஜய்!

சென்னை புழல் சிறைக்குச் சென்ற முதல்வர் விஜய் அங்குள்ள நிலையை நேரில் ஆய்வு செய்கிறார்.

முதல்வர் விஜய் - video grab
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சென்னை புழலில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலைக்கு இன்று முற்பகலில் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

தமிழக உயர் அதிகாரிகள், சிறைத் துறை அதிகாரிகளுடன் இன்று காலை சென்னை புழல் மத்திய சிறைக்குச் சென்றார் முதல்வர் விஜய்.

திடீரென, மத்திய சிறைச்சாலை வளாகத்தில் வந்து இறங்கிய முதல்வரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, புழல் மத்திய சிறையில் ஆய்வு செய்ய நேரில் வந்திருக்கும் முதல்வர் விஜய், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிகிறார் என்று கூறப்படுகிறது.

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கப்படும் கூடும், மருத்துவ வசதிகள் என அனைத்தையும் முதல்வர் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.

முதல்வர் விஜய், புழல் சிறைக்கு வந்திருக்கும் நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது

பாதுகாப்புக்காக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள், கைதிகளைப் பார்க்கும் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

முதலில், மகளிர் சிறைக் கூடத்தில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு நடத்திவிட்டு பிறகு ஆண்கள் அடைக்கப்பட்டிருக்கும் வளாகத்துக்கு முதல்வர் விஜய் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

summary

Chief Minister Vijay visited Chennai's Puzhal Prison

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments