சென்னையில் மிகப்பெரிய அளவில் வாகன மின்னணு ஏலம்!
சென்னையில் மிகப்பெரிய அளவில் வாகன மின்னணு ஏலம் விடப்படுவது குறித்து..
சென்னை பெருநகரில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று மற்றும் உரிமை கோரப்படாத 5,543 வாகனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்படைக்கப்பட்டு, மின்னணு ஏலத்தில் (E-auction) விற்பனை செய்யப்பட உள்ளது.
சென்னை, பெருநகர காவல் ஆணையாளர் அமுல்ராஜ் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் கேட்பாரற்று மற்றும் உரிமை கோராத தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை கண்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வந்தது.
சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில், தங்களது காவல் மாவட்ட எல்லைகளில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று மற்றும் உரிமை கோரப்படாத வாகனங்கள் என மொத்தம் 5,543 வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தற்போது, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கேட்பாரற்று மற்றும் உரிமைக்கோரப்படாமல் கைப்பற்றப்பட்ட மேற்கண்ட 5,543 வாகனங்களும் ஏலம் விடுவதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளரிடம் கலந்தாலோசித்து, ஒப்படைக்கப்பட்டு, இவற்றில் 1,936 வாகனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டு மின்னணு ஏலத்தில் (E-Auction) விற்பனை செய்யப்பட உள்ளது.
அதன்பேரில், 1,936 வாகனங்கள் இன்று முதல் கீழ்கண்ட தேதிகளில் மின்னணு ஏலத்தில் விடப்படுகிறது.
எண். - காவல் மாவட்டம் - ஏலம் விடப்படும் வாகனங்கள் - எண்ணிக்கை - ஏலம் விடப்படும் நாள் வரிசையாக உள்ளன.
1. புனிததோமையர் மலை 180 28.08.2026
2. கீழ்பாக்கம் 362 31.08.2026
3. திருவல்லிக்கேணி 522 02.09.2026
4. வண்ணாரப்பேட்டை 592 07.09.2026
5. கொளத்தூர் 98 09.09.2026
6. பூக்கடை 182 11.09.2026 மொத்தம் 1,936
மீதமுள்ள 3,607 வாகனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மின்னணு ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இவற்றின் மின்னணு ஏலம் விடப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 81 இருசக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 9 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 102 வாகனங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் வாகன மதிப்பீடுகள் பெறப்பட்டு Metal Scrap Trade Corporation (MSTC) இணையதளம் மூலம் மின்னணு ஏலம் (E-Auction) நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.