FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரமும் மானிய கோரிக்கை விவாதமும்!

இன்றைய சட்டப்பேரவை அலுவல் குறித்து...

தமிழக சட்டப்பேரவை.
பகிர்:

இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரம் இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் பல்வேறு துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது.

வியாழக்கிழமையில் (ஆக. 27) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், மானிய கோரிக்கை விவாதத்தைக் கடந்து, பல்வேறு விவாதங்கள் நடந்தன.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் நடந்ததால், அமைச்சர்களின் பதிலுரை ஏதுமில்லாமலேயே இரவு 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது.

இதனால், இன்று (ஆக. 28) நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி ஆகிய 3 துறைகளின் அமைச்சர்களும் பதிலுரை வழங்குவார்கள்.

மேலும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

summary

The debate on demands for grants in today's Assembly session

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments