பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
முதல்வர் விஜய் பாகிஸ்தான் சென்றது போன்று பொய் செய்தி பரப்புவதில் தவெக சாதனை படைப்பதாக ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
சமூக வலைத்தளங்களில் பொய் செய்தி பரப்புவதில் தவெக கின்னஸ் சாதனை படைத்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அன்னை தமிழகத்தை மோசடி தமிழகமாக மாற்ற முயற்சிக்கிறதா தவெக, சமூக வலைதளங்களை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,இன்றைக்கு சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்புவதில் தவெக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஆதாரமற்ற செயலையும், அடிப்படை இல்லாத செய்திகளையும், சமூக வலைதளங்களில் பெய்டு இன்ஃப்ளுயுன்சர் மூலமாக நெகட்டிவ் செட் பண்ணுவதில் தவெக அரசுக்கு தொடர்பு இருக்கிறதா விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து மத்திய அரசு ஏன் மௌனமாக இருப்பதாக கேள்வி எழுந்துள்ளது? அண்மையில் பாகிஸ்தானுக்கு விஜய் சென்றது போல் அங்கு இம்ரான்கானுடன் இருப்பதாக எப்படி ஆதாரம் அற்ற செய்தி வந்தது. ஒரு மாநில முதல்வர் பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும், தெலங்கானா முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டபோது மறுத்தது அதனால் அவர் வெளிநாடு செல்ல முடியவில்லை.
இஷ்டத்துக்கு இவர்கள் நெகட்டிவ் செட் பண்ணுவதற்காக இந்த சமூக வலைதளங்களில் செய்கிறார்கள். உண்மை சரிபார்ப்பு எங்கே ? சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்களை மக்கள் உண்மை என்று நம்பி விட முடியாது. குறிப்பாக ஒரு மாநில அரசு தவறான தகவலை திட்டமிட்டு பரப்பினால் அது அந்த மாநிலத்தின் பொது பார்வையை மாற்றகூடும்.
எனவே தமிழக அரசின் தகவல் மற்றும் உண்மை சரிபார்க்கும் அமைப்பு, காவல் துறை சைபர்கிரைம் இத்தகைய தகவல்களை தொடர்ந்து கண்காணித்து உண்மையை தெளிவுபடுத்தி மக்களுக்கு சொல்ல வேண்டும். அதே நேரத்தில் இந்த பிரசாரத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ஆளும் தவெக அரசு மக்களிடத்தில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு கடமையும் இருக்கிறது.
விஜய்தான் அடுத்த பிரதமர் என்று இன்றைக்கு வட மாநிலங்களில் பான்பராக்கை மென்று கொண்டு இன்ஃப்ளுயன்சர் வெளியிட்ட விடியோக்களின் அடுத்த கட்டமா அல்லது அடுத்த கட்டமாக விஜய் அமெரிக்க அதிபர் என்று கூட சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சமூக வலைதளங்களில் செய்திகளை கடந்து செல்லாமல் அதன் பின்னணியில் இருக்கும் ஆதாரத்தையும் சரிபார்க்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
ஒரு வீடியோவுக்கு 60,000 என்று பேரம் பேசி இன்ஸ்டா பிரபலங்கள் செய்திகளை வெளியிடும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதில் எனக்கு சந்தேகம் வருகிறது. ஒரே ஸ்கிரிப்ட், உருட்டு, இந்தியாவில் பல வலைத்தள கணக்குகளில் ஒரே மாதிரி கருத்துகள் வெளியாகி உள்ளன. மொழி மட்டும் மாறுகிறது தகவல் மாறுவதில்லை ஒரே சம்பவம், ஒரே அரசியல் குற்றச்சாட்டு, ஒரு மாதிரியான வசன அமைப்பு, சில காணொளியில் பயன்படுத்தும் இந்தி வாக்கியங்களில் தமிழில் இருந்து கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் வெளியிடப்பட்டுள்ளது
சிலர் பேசும் வாய் அசைவுக்கும், வசனத்திற்கு கூட பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஒரே மாதிரியான ஸ்கிரிப்ட்டை பலர் கையில் வைத்துக்கொண்டு வெவ்வேறு பின்னணிகளில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றனர் .இந்த ரீல்ஸின் ஆதாரம் இல்லை என்று அப்பட்டமாக தெரிகிறது.
வடக்கன்ஸ் வெளியிடும் அந்த இன்ஸ்டா பதிவில் தமிழ்நாட்டைப் பற்றி வெளியாகும் செய்திகள் இவ்வாறு உள்ளன. தமிழ்நாட்டில் எந்த பெண்ணுக்கும் பாலியல் தொல்லை நடந்தாலும் அடுத்த 24 நேரத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அல்லது என்கவுண்டர் என்று முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் என தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் உண்மையில் இங்கு பயிர் கடன் தள்ளுபடிகே தள்ளாடுகிறது தவெக அரசு. இதில் லாக்கப் டெத் மரணங்கள் சந்தி சிரிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
அடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்காவிட்டால் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு வரி செலுத்தாது என்று பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமிர்ஷாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரிலீஸ்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோயில் உண்டியல் கிடைக்கும் காணிக்கை அரசு பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்படுவதாகவும் காணொளிகளில் கூறுகின்றன.
மதராச பள்ளிகளில் மின்சார கட்டணத்தை தமிழக அரசே செலுத்துவதாக அதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அடுத்து தமிழ்நாட்டில் பசு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வருகின்றன. இந்த தகவல் பலவற்றுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களோ அரசு அறிவிப்புகளோ நம்பகமான செய்தி ஆதாரங்கள் இல்லை .
மாறாக சில தகவல்கள் தமிழக அரசின் கொள்கைக்கு மாறுபட்டதாக இருக்கிறது. ஒரு மாநில அரசின் செயல்கள் மற்றும் கொள்கைகள் குறித்து வெளி மாநிலங்களில் சமூக வலைகளில் இருந்து தகவல் பரவுவது. இன்றைக்கு மிகப்பெரிய தவறு ஆகும் உண்மைக்கு மாறான தகவலாக இருக்கும்போது மிகப்பெரிய தவறு. உண்மையாக இருக்கும் பொழுது எடுத்துச் செல்வதில் எந்தவிதமான ஆட்சேபனை இல்லை.
ஆனால் நடக்காத ஒன்றை நடந்ததாகவும் நடக்காத திட்டத்தை செயல்படுத்தியதாக பொய் வீடியோ மூலம் கூறுவது அரசியல் மோசடியாக எல்லையைத் தாண்டி இது அப்பட்டமான பயங்கரமான மோசடியாக தெரிகிறது.
ஆகவே யார் இவற்றை எழுகிறார்கள்? யாருடைய அரசியல் நோக்கத்திற்காக உருவாக்கப்படுகின்றன? என்ற கேள்விகளுக்கு மக்களுக்கு விடை கிடைக்க வேண்டியது அவசியம். இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலையில் இப்போது ஒரு கும்பல் முதல்வர் விஜய்யை சர்வதேச தலைவராக நினைக்க முயற்சிக்கின்றன.
ஆகவே இதுகுறித்து மத்திய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Did Vijay visit Pakistan? TVK sets a record for spreading fake news! R.B. Udhayakumar levels allegations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.