சண்டை காவிரி நீருக்கா? த்ரிஷா அண்ணிக்கா? - அதிமுக கேள்வி
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டன அறிக்கை குறித்து...
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் காவிரி பிரச்னைக்காக சண்டை போடுகிறார்கள் என்று பார்த்தால் த்ரிஷா அண்ணிக்காக சண்டை போடுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளது.
Advertisement
Advertisement
தமிழக நீர்வளத் துறையின் கீழ் பாலாறு, காவிரி, பரப்பிகுளம், வைகை, தாமிரபரணி, நம்பியாறு என 90 அணைகளின் கீழ் 14,141 பாசன ஏரிகளும், உள்ளாட்சியை நிர்வாகத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் என இவைகள் மூலம்தான் உள்ளூர் வேளாண் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகின்றன.
தென்மேற்கு பருவமழை இயல்பான மழை அளவான 126.8 மில்லி மீட்டரைவிட 14 சதவீதம் குறைவாக 108.4 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. மாநில முழுமைக்கான அணைகளின் கொள்ளளவு இந்த ஆண்டு 31.4 சதவீதம் குறைந்துள்ளது.
தற்போது, அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 30 நாள்களில் ஒரு மூட்டை அரிசி விலை ரூ. 300 முதல் ரூ. 400 வரை விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்ற அரிசி, தற்போது ரூ. 66-க்கு விற்கிறது. இந்த நிலையில்தான் யார் என்ன பேசினாலும் எதைப் பேசினாலும் எப்படி பேசினாலும் எவ்வளவு பேசினாலும் என்ன நடந்தாலும் நம்ம முதல்வருக்கு கோபமே வராது. ஆனால், குலவிளக்கான பெண்களை இழிவுபடுத்தி மட்டும் யாராவது தமிழ்நாட்டில் மூச்சுவிட்டாலே, அவ்வளவுதான்.
தமிழ்நாடு பற்றி எரிந்தாலும் சரி, ரத்த சொட்டச் சொட்ட போராட்டம் நடந்தாலும் சரி, தமிழ்நாடே போராட்டக்களமாக மாறினாலும் சரி, நாடாளுமன்றத்திலே போராட்டம் நடத்தினாலும் சரி , நம்ம சிஎம் சார் போட்ட உத்தரவால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
மொத்தத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் காவிரி தண்ணீருக்காக சண்டை போடுறாங்க என்று எதிர்பார்த்தால், த்ரிஷா அண்ணிக்காக சண்டைப் போடுறார்கள்” என்று ஆர் .பி. உதயகுமார் தெரிவித்தார்.
Former Minister R.B. Udhayakumar has condemned the ruling and opposition parties, stating that while it appeared they were fighting over the Cauvery issue, they are actually fighting over "Trisha Annhi."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.