இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 31 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
சட்டப்பேரவைக்கு நடந்தே வந்த திமுக எம்எல்ஏ!
புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிலை அரசின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் நோக்கில் திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் சட்டப்பேரவைக்கு நடந்தே வந்துள்ளார்.
தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல்
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் சாலை விரிவாக்கம் குறித்து விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரித்து வெளியிடப்படும் என பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டர் ரூ.38 லிருந்து ரூ. 41 ஆக உயர்த்தப்படுவதாக 10 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ரூ.3 உயர்த்தி கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.
முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ
பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் விஜய்க்கு துளியும் கிடையாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.