FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குரூப்-2 முதன்மைத் தேர்வில் குளறுபடி ஏன்? டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப்-2 தேர்வு குளறுபடி ஏன்? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளதைப் பற்றி...

8 பிப்ரவரி 2026, 11:49 am IST
டிஎன்பிஎஸ்சி.
பகிர்:

குரூப்-2, 2ஏ தேர்வில் குளறுபடி ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்துள்ளது.

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்பட குரூப்-2ஏ பதவிகளுக்கும் என 828 காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று (பிப்.8) காலை நடைபெறவிருந்தது.

தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வுகள் நடைபெறவிருந்த நிலையில், பல்வேறு குளறுபடிகளால் இன்று குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “சென்னையில் இன்று (பிப்.8) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்2, 2ஏ பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை.

எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும்.

இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் தகவல் அளிக்கப்படும்.

வருகிற பிப். 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-2) பொது அறிவு தேர்வு (தாள்-2) வழக்கம்போல் அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) மீண்டும் பிப். 13 ஆம் தேதி வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments